இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
கேப் டவுன் நடைபெற்று முடிந்த டெஸ்டில் காயம் அடைந்த டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவருக்கு இது தான் அறிமுக டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் தவான், விக்கெட் காப்பாளர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஸ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
சொந்த மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை துள்ளியமாக அறிந்த வைத்திருக்கும் மார்கிராம் 81 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் 27 ஓவரில் 78 ஓட்டங்களை சேர்த்தது.
தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா 85 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.
டீன் எல்கர் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார்.
இதனை தொடர்ந்து மார்கிராம் 94 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிந்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா 56 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்தள்ளது.