அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக தெரிவித்த இனவெறிக் கருத்துக்களை திரும்பப் பெறவும் மன்னிப்பு கோரவும் ஐநாவுக்கான 54 ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளை மாளிகைக் கூட்டத்தில் ஹைத்தி, எல்சல்வடார் நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் நலன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த நாடுகளை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்த டிரம்ப், அவர்களை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐநாவுக்கான 54 ஆப்பிரிக்க நாட்டுத் தூதர்களின் அவசரக்கூட்டம் நடைபெற்றது.
ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு எதிரான அமெரிக்க நிர்வாகத்தின் நிறவெறிப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
எனவே டிரம்ப் மன்னிப்பு கேட்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.