கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடப் போவதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் நடந்த பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மறைத்து வைத்துள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்சவும், மற்றும் மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கம் 2008ஆம் ஆண்டு எவ்வித அனுமதியும் இன்றி 4,ஆயிரம் பில்லியன் ரூபாவை கொள்ளையிட அனுமதி வழங்கியதாகவும். இதுதான் உண்மை. இதற்கான ஆதாரங்களை எதிர்காலத்தில் வெளியிடபோவதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சேறுபூச ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடாது ஒழித்து வைத்துள்ளதாக தெரிவித்த சுஜீவ சேனசிங்க அப்பாவி என்பதால், ரணில் விக்ரமசிங்க விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பெறப்போகும் வெற்றியை தடுக்கும் நோக்கில் குறித்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் எனவும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.