Loading...
நாட்டில் மதுபான விற்பனை நிலையங்களின் வர்த்தக நேரத்தை நீடித்தல் தொடர்பில் அண்மையில் கலால் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அகலவத்த பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தள்ளார்.
இதேவேளை, கலால் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Loading...
தனது தலையீட்டினால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டள்ளார்.
Loading...