பிரிட்டனை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் தமிழர்கள் சிறந்த எடுத்துக்காட்டு என பிரிட்டன் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்தவர்களால்; தாங்கள் பெருமையடைவதாகவும் பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரிட்டன் மட்டுமல்லாது உலகமுள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பாணர்ஜி, மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.