இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமாகியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இந்திய அணியில் தவான், விக்கெட் காப்பாளர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஸ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.
சொந்த மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை துள்ளியமாக அறிந்த வைத்திருக்கும் மார்கிராம் 81 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் 27 ஓவரில் 78 ஓட்டங்களை சேர்த்தது.
தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா 85 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.
டீன் எல்கர் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார்.
இதனை தொடர்ந்து மார்கிராம் 94 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிந்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா 56 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்தள்ளது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமானது இதில் தென்னாபிரிக்க அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 335 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றியுள்ளார்.
இதனை தொடந்து தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி தடுமாற்றத்துடனே துடுப்பெடுத்தாடியது.
ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
ராகுல் 10 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ஓட்டம் எதனையும் எடுக்காமல் வெயியேறினார்.
முரளி விஜய் 46 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ரோகித் சர்மா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார்.
தற்போது களத்தில் விராட் கோலி 71 ஓட்டங்களுடனும் பார்திப் பட்டேலும் உள்ளனர்.
இந்திய அணி 49 ஓவர்கள் நிறைவில் 4விக்கெட்டுக்களை இழ்ந்து 139 ஓட்டங்களை எடுத்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.