என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் என ரஜினி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.
தனது ரசிகர்களை தொடர்ந்து சந்தித்த அவர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் நேரடியாக அரசியல் களத்தில் குதிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதுவரை யாரையும் விமர்சிக்க கூடாது என ரசிகர்களுக்கு ரஜினி தெளிவாக தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தும், எதிர்த்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
தனது கட்சியின் பெயர், சின்னம், கொடியை வடிவமைக்கும் வேலையில் ரஜினி தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ரஜினி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ட்விட்டரில் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்’ என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.