சுவிட்சர்லாந்தில் அமெரிக்காவின் ஜனாதிபதிபதியான டொனால்டு டிரம்புக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு உலகப் பொருளாதார அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந்த அமைப்பின் வருடாந்த மாநாடு டாவோஸ் நகரில், எதிர்வரும் ஜனவரி 22ம் திகதியில் இருந்து தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த மாநாட்டிற்கு உலகெங்கும் இருந்து 40 நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என 3ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் வருகை தரவுள்ளார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே 700க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் தலைநகரான பேர்னில் கூடி நேற்று போராட்டம் நடத்தினர்.
உலகப் பொருளாதார மாநாடு மட்டுமின்றி, அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருடாந்த சந்திப்பை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.
இதுதவிர Trump not welcome – stay out of Davos என தலைப்பிட்ட மனுக்கு ஆதரவாக 12ஆயிரத்து 880 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 23ம் திகதி சூரிச் வரவுள்ள டிரம்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.