19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்கள் பெற்றது.
208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்ஷன் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 74 ஓட்டங்களையும் எடுத்தனர், ஆட்ட நாயகனாக லக்ஷன் தெரிவு செய்யப்பட்டார்.