சர்சைக்குரிய பிணைமுறி சம்பவத்தில் தவறு இடம்பெற்றிருக்குமாயின் அதன்பொருட்டு தற்போது தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வெயங்கோட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது சந்திரிகா இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் என தெரிவித்த சந்திரிகா என்றாலும் அமைச்சர்களும் சில அதிகாரிகளும் தவறு செய்தவர்களாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர்களையும் ஒன்றாக கொன்று ஒழித்து விட முடியாது என தெரிவித்த சந்திரிகா
படிப்படியாகவே தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அதன் முன்னாள் ஆளுநர் உடனே வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்த சந்திரிகா நிதி அமைச்சரும் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஸ காலத்தில் அவ்வாறு ஒரு தண்டனையும் வழங்கப்பட்டதில்லை என குறிப்பிட்டுள்ள சந்திரிகா மகிந்த ராஜபக்ஸவும் பல பில்லியன் கணக்கில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த விடையம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.