எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் பிரதமரின் கரங்களை பலப்படுத்தி, புதிய பயணத்தை தொடர தயாராக உள்ளதாக அமைச்சர் லக்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே லக்மன் கிரியல்ல இவ்வாறு தெரிவித்தள்ளார்.
நல்லாடசி அரசாங்கத்திற்கு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வந்தது ஐக்கிய தேசிய கட்சி தான என தெரிவித்த லக்மன் கிரியல்ல எனவே தமக்கே, நாடாளுமன்றில் பெரும்பான்மையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியை வேண்டாம் என ஒதுக்கினால், புதிய பயணத்தை தொடர தயார் என்றும் லக்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெப்ரவரி மாதம் 10 திகதிக்கு பின்னர் யார் தேர்தலில் வெற்றி பெறுவர்கள் என தெரியவரும் எனவும் அமைச்சர் லக்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.