கனடாவில் வசித்துவந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குற்த்த சம்பவம் ஒன்றாரியோ – ஒஸ்வா பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் நிவேதன் பாஸ்கர் என்ற 17வயதுடையவர்; எனவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
இக் கொலை சம்பவமானது கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு இளைஞர்களுக்கிடையில் முதலில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த மோதலின் இறுதியில் கத்திக்குத்து சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 16 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனினும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதோடு கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.