Loading...
இத்தாலியிலிருந்து பிரான்ஸ் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பிராந்திய தொடரூந்தின்; மேல்கூரையின் மீது ஏறி பயணம் செய்த அகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிறு பிரான்ஸின் மெண்டன் பகுதி தொடரூந்து நிலையத்துக்கு தொடரூந்து வந்தபோது பாதி உடல் எரிந்த நிலையில் அகதியின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
மேற்கூரையின் மீது ஏறி நின்ற அவர் கீழே விழக்கூடாது என்பதால் மின்சார கம்பியை பிடித்து கொண்டதையடுத்து மின்சாரம் தாக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...
குறித்த தொடரூந்தில் பயணம் செய்த பயணிகள், மேல்கூரையில் நெருப்பை பார்த்ததாகவும், கத்தும் குரல் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொடரூந்து பாதையில் சமீபத்திய கணக்குபடி நடைபெற்ற ஐந்தாவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...