இந்தியாவில் 11 வயது தலித் சிறுமியின் உடலுடன் உறவு கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் பானிபட்டின் உர்லானா கலன் கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமி இரு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த முறைப்பாட்டின்; பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மறுநாள் காலை குளம் அருகே சிறுமியின் அரைநிர்வாண சடலம் கிடப்பதாக பொலிசுக்கு தெரியவந்தது.
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருக்கலாம் என பொலிஸ் சந்தேகித்த நிலையில், பிரதீப் குமார் மற்றும் சாகரை என்பவர்களை பொலிசார் கைது செய்தனர்.
இதன்பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் காவலில் எடுத்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமியை தாங்கள் கடத்தியது உண்மை எனவும் பாலியல் உறவு கொள்ள முயற்சித்த போது சிறுமி மறுத்ததால் கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டனர்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலோடு உறவு வைத்துக் கொண்டதோடு உடலை மறைத்துவிட்டு தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.