சுவிற்சர்லாந்து மக்களில் அரைவாசிக்கும் மேலானோர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்னர்.
Tamedia நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பின் முடிவில் 54 சதவிகிதம்பேர் அரசின்மீது அதிருப்தியையும், 45 சதவிகிதம்பேர் தங்கள் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர், 1 சதவிகிதம்பேர் எந்தக்கருத்தும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முதல் பகுதியில், 55 சதவிகிதத்தினர் பாராளுமன்றத்தின் ஃபெடரல் சபைகளின் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அரசின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கியதில், ஒருவர் கூட ஆறுக்கு நான்கு மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றவர் Alain Berset அவர்தான் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கருத்துக்கணிப்பு ஜனவரி 4ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வரை 20 ஆயிரம் சுவிற்சர்லாந்து மக்களிடையே நடத்தப்பட்டதாகவும் ரா மீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.