பிரித்தானியாவைக் காற்றும் பனியும் மழையும் கலந்து பந்தாட உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையமான Met Office தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவும், பலத்த காற்றும் போக்குவரத்தை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலங்கட்டி மழையும் மின்னலும் பனிப்புயலும் கூட ஏற்படலாம் என்றும், ஆனால் அவ்வப்போது சூரியனும் தலைகாட்டும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
பலத்த குளிர்காற்று வீச உள்ளதால், வெப்ப நிலை மிகவும் குறையும். வெப்ப நிலை பிரித்தானியாவின் வட பகுதியில் உறை நிலைக்கு கீழும் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கிட்டத்தட்ட உறை நிலையையும் அடையும்.
மேற்கிலிருந்து வீசும் காற்றுகள் வட மேற்காகத் திரும்பும்போது வடக்கிலிருந்து குளிர்ந்த காற்றைக் கொண்டுவருவதால், மாலையில் வெப்ப நிலை மிகவும் குறையும்.
வடக்கில் மையம்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக ளுஉழவடயனெஇலும் ஐசநடயனெஇன் சில பகுதிகளிலும் பனிமழையும், வடமேற்கு பிரித்தானியா மற்றும் றுயடநள பகுதிகளில் மழையும் பனியும் மாறி மாறி பொழியும்.
நாள் முழுவதும் மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளதால் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.