பிரிட்டிஷ் கொலம்பியாவின் வன்கூவரில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 15 வயதான சிறுவன் நேற்று (திங்கட்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேலும் 50 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன்கூவர் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நபரொருவர் மீது கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், வாகனத்தில் தனது குடும்பத்தாருடன் சென்றுகொண்டிருந்த குறித்த சிறுவனை துப்பாக்கிச் சன்னம் பதம் பார்த்துள்ளது.
இதில் காயமடைந்த சிறுவன், வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் மரண விசாரணை சேவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான இலக்கான 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதான ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.