Loading...
தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், கே.எல் ராகுல் ஆகியோர் ஆடுகளத்தில் தமிழில் பேசிக் கொண்ட கணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த கணொளியில் விஜய், தென்னாபிரிக்க அணியின் பந்தை எதிர்கொண்டிருந்த ராகுலை நோக்கி ‘மெல்ல… மச்சான் இந்த ஓவர் எல்லாமே (பந்தை ) உள்ளதான் போடுறாங்க’ என்று கூறுகிறார்.
ஆனால், கே.எல் ராகுல் கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற போதிலும் அவர் தமிழில் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
287 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, நேற்றைய நான்காவது ஆட்டநேர முடிவில் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...