அமைச்சரவையின் தீர்மானங்களுக்குச அமைய மபான வர்த்தகம் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்களும் மதுபானம் கொள்வனவு மற்றும் விற்பனை செய்ய முடியும் என்பதோடு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சாராயக் கடைகளை திறந்து வைத்திருக்க முடியும் என தெரிவித்து நிதி அமைச்சு வர்த்தமானியினை வெளியிட்டது.
இதற்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு பெண்ணியவாத அமைப்புக்கள் சம அந்தஸ்த்து வழங்கப்பட்டமைக்கு மகிழ்ச்சினையும் வெளிப்படுத்தியிருந்தன.
எனினும் பெண்கள் நலனோம்பல் அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த வர்த்தமானியை இரத்து செய்வதாக சனாதிபதி வாக்குறுதி வழங்கினார்.
இதற்கிணங்கவே குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது