அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகளுக்கு ஜனாதிபதித் தேர்தலில்ல போட்டியிடுவதற்குறிய வேட்பாளர் இல்லாததன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியதாகவும அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிபால இன்றி அரசாங்கம் அமைக்க முடியும் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் அதுதொடர்பிலும் தாம் பார்த்துக் கொள்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிபலனை அனுபவிக்க தெரியாமல் இல்லை என்றும் அதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதையே தற்போது தான் செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.