பிரபல நடிகை பிபாசா பாசு கர்ப்பமாக உள்ளதாகச் சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது.
இதுபோன்ற செய்திகள் வெளிவருவது முதல்முறையல்ல. கடந்தவருடம் இதுபோன்ற ஒரு செய்தி வெளிவந்து அதை பிபாசா பாசு மறுத்த நிலையில் மீண்டுமொரு செய்தி, மீண்டுமொரு மறுப்பு வெளியாகியுள்ளன.
பிபாசா பாசு ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது:
மீண்டும் வேடிக்கையாக உணர்கிறேன். என்னுடைய மடியில் என் பையை வைத்து காரில் ஏறினேன். உடனே சில ஊடகங்கள் நான் கர்ப்பமாக உள்ளதாக எழுதிவிட்டன.
நண்பர்களே, நான் கர்ப்பமாக இல்லை. இதுபோன்ற தருணங்கள் கடுப்பைக் கிளப்புகின்றன. பொறுமையாக இருக்கவும். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போதுதான் அது நடக்கும் என்று 39 வயது பிபாசா எழுதியுள்ளார்.
அலோன் படத்தில் பிபாசா பாசுவும் நடிகர் கரண் சிங்கும் ஒன்றாக நடிக்க ஆரம்பித்தபோது காதலர்கள் ஆனார்கள். பிறகு, 2016-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.