சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வரும் ரெஜினா, தற்போது ஒரு படத்தில் போதைக்கு அடிமையானவராக நடித்திருக்கிறார்.
தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கில் நானி தயாரித்து வரும் படம் ‘அவே’, இந்த படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோரிடம் ரெஜினா நடித்து வருகிறார்.
இதில், போதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கிறார் ரெஜினா. இது பற்றி கூறியுள்ள அவர், “எனக்கு பெயர் சொல்லும் படமாகவும், வேடமாகவும் இது அமையும்’ என்றார். மேலும் இந்த வேடம் மிகவும் சவாலாக இருந்ததாகவும் ரெஜினா கூறியிருக்கிறார்.