நாட்டில் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் வீதம் அதிகரித்துவருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறித்த விடையத்தினை மஹாரகம புற்றுநோய் மருத்துவமனையின் சிறுவர் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 500 சிறுவர் புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புற்றுநோய் அதிகரிப்பு வீதத்தை கட்டுப்படுத்த தவறான உணவு மற்றும் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை தடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.