கதிர்காமத்தில் இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கதிர்காமம் நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு கதிர்காமம் நகருக்கு அருகில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் அதில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதனால், பதற்றமான ஒரு நிலைமை உருவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.