நாட்டில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி.கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் தொடர்பில் மக்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க
தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றுவது இல்லை எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததென சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸாநாயக்க எனினும், அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.