சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட 22 பேர், கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 57 ஆயிரம் மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் அவிசாவளை, பாதுக்க மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் மேலும் தெரித்துள்ளனர்.
இதேவேளை சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் செல்லும் பலர், இவ்வாறு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்தச் செல்கின்றமை தொடர்பில் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.