ஜெனிவா தம்பதி அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் இறுதிசடங்கு செலவுக்கும், அனாதையான ஆறு குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை சேர்ந்த மைக்கேல் பிஸ்ச்பேச் (48) மற்றும் ஜூலியானா (50) தம்பதி அமெரிக்காவின் கிளீவ்லாண்ட நகருக்கு சென்றிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காரில் இருந்தபடியே மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு சடலங்களையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனிடையில் புழகுரனெஆந என்ற நிதி திரட்டும் ஓன்லைன் பக்கம் மூலம் தம்பதியின் இறுதிசடங்குக்கும், அவர்களின் ஆறு குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
மொத்தம் 4,000 டொலர் நிதியை திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை வரை 1475 டொலர் நிதி கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.