பிரித்தானிய இளவரசி மறைந்த டயானா விதவிதமான விலையுயர்ந்த நகைகள் அணிவதில் இறுதிவரை ஆர்வமாக இருந்தார்.
கண்ணை கவரும் வகையில் மிக அழகான டிசைன்களில் பல்வேறு நகைகளை அவர் வைத்திருந்திருந்தார்.
டயானா உயிரிழந்த பிறகு அவருக்கு சொந்தமான நகைகள் அவரின் மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கு தரப்படலாம் என கூறப்பட்டது.
முக்கியமாக வைரத்தாலே ஆன மிக விலையுயர்ந்த டயானாவின் நிச்சயதார்த்த மோதிரம் அவரின் இரண்டு மகன்களில் யாருக்கு முதலில் திருமண நிச்சயம் நடக்கிறதோ அவர்களுக்கு அணிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வில்லியமுக்கும் கேட் மிடில்டனுடனுக்கும் முதலில் திருமணம் நடந்த நிலையில் கேட்-க்கு தனது தாயின் மோதிரத்தை வில்லியம் அணிவித்தார்.
அதே போல நெக்லஸ், காது தோடுகள், ப்ரேஸ்லெட், கை கடிகாரங்கள் போன்றவைகளையும் டயானா வைத்திருந்தார்.
இதில் ப்ரேஸ்லெட் கழுத்து பட்டையாக மாற்றி செய்யப்பட்டது.
இந்த நகைகள் எல்லாம் தற்போது யாரிடம் உள்ளது என தெரியாத நிலையில் காது தோடுகள் மற்றும் கிரீடத்தை கேட் மிடில்டன் பயன்படுத்தி வருகிறார்.
இதில் பல நகைகளை டயானாவுக்கு அவரின் திருமணத்தின் போது மகாராணி எலிசபெத் அணிவித்தார்.
டயனாவின் வைர கற்களின் சில பகுதிகள் ஹரி – மேகன் மெர்க்கல் திருமண நிச்சயதார்த்த மோதிரத்துக்கு பயன்படுத்தபட்டதாக கூறப்படுகிறது.