ஊவா மாகாண கல்வியமைச்சு பொறுப்பை கையேற்குமாறு ஆளுநருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை, மாகாண முதல்வர் சாமர சம்பத் தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்தமை பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் தான் வகித்து வந்த கல்வியமைச்சுப் பொறுப்பிலிருந்த விலகுவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்திருந்தார்.
அதன் பின்னர், கல்வியமைச்சை பொறுப்பேற்குமாறு ஆளுநர் எம்.பி.ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதேவேளை சம்பந்தப்பட்ட அதிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என பரிசோதிப்பதற்காக, அவரை பதுளை தேசிய வைத்தியசாலைக்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால், கல்விச்சமூகம் ஆத்திரமடைந்துள்ளதோடு, வைத்தியசாலை பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.