தமிழ்நாட்டில் பேரூந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்பதாக மத்திய இணையமைச்சரான பொன்.ராதா கிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் எதிர்வரும் 27ம் திகதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து மாவட்டங்களில் ஜனவரி 24 ம் திகதி போராட்டம் நடத்த போவதாக பா.ஜ.வும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓசூரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேபொன்.ராதா கிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பேரூந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளமையானது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சனை தீர்க்கப்படும் எனவும் பொன்.ராதா கிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.