எதிர்வரும் பிப்ரவரி 21ஆம் திகதி தொடக்கம் 3 நாட்களுக்கு மக்களை சந்திக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிப்ரவரி 24ஆம் திகதி மதுரையில் மாநாடு நடைபெற இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என விளக்கமளித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அவரது இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களிடையே உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமது அரசியல் பயணத்தில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், எதிர்வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பெயரை அறிவித்து, மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.