நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒப்புக்கொண்டுள்ளார்.
வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகத்தின் திறப்பு விழாவிலேயே தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகளுக்காகவே அரசாங்கத்திடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்தினை பெற்றுக்கொண்டதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்றதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை யாவரும் அறிந்ததே!!
குறித்த குற்றச்சாட்டை நிராகரித்த தர்மலிங்கம் சித்தார்த்தன் கிராமிய அபிவிருத்தி பணிகளுக்காகவே குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டதுடன், வன்னி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரொருவரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.