பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி சர்வாதிகாரியாக செயற்பட தான் முயற்சித்தால் ராணுவம் மற்றும் பொலீசார் தன்னை சுட்டுக் கொல்லலாம் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சின் தலைநகரான மணிலாவில் நேற்று ராணுவ தலைமையகத்தின் முகாமை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சின் அரசியலமைப்பு சட்டத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியது ராணுவத்தினர் மற்றும் பொலீசாரின் தலையாய கடைமை எனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றதுடன் போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஆட்சி மற்றும் நிர்வாகரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களையும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக பிலிப்பைன்சின் பன்முகத்தன்மையை மாற்றி ஒருமுகப்படுத்தப்பட்ட மத்திய ஆட்சிக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலம் அனைத்து மாகாணங்களிலும் சமச்சீரான ஆட்சி முறையை அறிமுகப்படுத்தவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முயச்சித்து வருகின்றார்.
குறித்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.