இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள 5 புதிய தூதுவர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து குறித்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சூடான் , வியட்நாம் , மியன்மார் , கொரியா மற்றும் சீன போன்ற நாடுகளுக்காக இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Mr. Sirajuddin Hamid Yousif – இலங்கைக்கான சூடான் நாட்டின் தூதுவர்
Ms. Pham Thi Bich Ngoc – இலங்கைக்கான வியட்நாம் நாட்டின் தூதுவர்
Mr. Han Thu – இலங்கைக்கான மியன்மார் நாட்டின் தூதுவர்
Mr. Lee Heon – இலங்கைக்கான கொரியா நாட்டின் தூதுவர்
Mr. Cheng Xueyuan – இலங்கைக்கான சீன நாட்டின் தூதுவர்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் தமது அறிமுகச் சான்றுக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.