பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் கணவரும் நடிகருமான கயல் சந்திரன் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என செய்திகல் வெளியாகியுள்ளது.
கயல் படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார் சந்திரன்.
தற்போது திட்டம்போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் பின்வருமாரு குறிப்பிடப்பட்டுள்ளது, கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் நாங்கள் திட்டம்போட்டு திருடுற கூட்டம் படம் தயாரிக்கிறோம்,
நீங்கும் பங்கேற்க வேண்டும் என்றார்கள். நானும் ஒப்புக்கொண்டு ரூ.5 கோடி பணம் கொடுத்தேன்.
ஆனால், படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர்.
மேலும், கடந்த ஒரு வருடமாக பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.