சமீபத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு தமிழக அரசு பெரியார் விருது வழங்கியது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
எப்பொழுதும் பக்தி பழமாக இருக்கும் பா.வளர்மதி கோவிலுக்கு சென்று மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி எடுப்பது என சாமி கும்பிடும் பெண்ணாக இருக்கிறார்.
அவருக்கு எப்படி கடவுள் மறுப்பு கொள்கையுடைய தந்தை பெரியாரின் விருதை அளிக்கலாம் என சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து இந்த விருதை பெற்ற பா.வளர்மதி தான் இந்த விருதுக்கு தகுதியானவரே என விளக்கம் அளித்தார்.
தந்தை பெரியாரை கடவுள் மறுப்பு கொள்கை மட்டும் உடையவர் என குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடாதீர்கள்.
அவர் பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, கலப்பு திருமணம், விதவை திருமணம், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுத்தார்.
அந்த அடிப்படையில் தான் இந்த விருதுக்கு தகுதியானவர் என வளர்மதி கூறினார்.
வளர்மதி மற்றும் அவரது பிள்ளைகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதை அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பெரியார் விருது வளர்மதிக்கு அளிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமான பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது என்றார்.
ஒரு முன்னாள் அமைச்சரை, பாடநூல் கழக தலைவரை கீழ்த்தரமான பெண் என புகழேந்தி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.