பிரதமர் மோடி இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலும் ஹிந்தியில் பேசும் பழக்கம் கொண்டவர்.
ஆனால், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஆங்கிலத்தில் பேசுவார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸில் உலக பொருளாதார மாநாடு நடந்தது. இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்காவும், தொழில் வளர்ச்சிக்காவும் இந்த மாநாடு நடந்தது.
இதுவரை அங்கு பேசிய இந்திய பிரதமர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார்கள்.
ஆனால் முதல் முறையாக மோடி அங்கு ஹிந்தியில் பேசினார். இதற்கான மொழிப்பெயர்ப்பு அங்கு இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால், ஹிந்தியோடு முடித்துக்கொள்ளாமல் சமஸ்கிருதத்திலும் பேசியிருக்கிறார். இதனால் அங்கு மொழி புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.
அவ்வப்போது சமஸ்கிருத பொன்மொழிகளை மோடி கூறியபோது, அதற்கான விளக்கம் மொழிப்பெயர்ப்பு புத்தகத்தில் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது.