தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார்.
அவரை நாங்கள் தான் சட்டையை பிடித்து முதல்வராக உட்கார வைத்தோம் என சசிகலா, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளார்.
தொடக்கத்தில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் ஆதரவுடன் முதல்வராக எம்எல்ஏக்களின் துணையுடன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைத்துவிட்டார்.
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வருகின்றனர். தற்போது தினகரன் அணியாக சசிகலா அணி செயல்பட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தினகரன், சசிகலா அணியில் உள்ள பெங்களூர் புகழேந்தி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, நாங்கள் சட்டையை பிடித்து உட்கார வைத்தவர்தான் தற்போதையை முதல்வர்.
இந்த முதல்வர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.