சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக நகரங்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீசியேன் லூங் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற நட்புறவு பேச்சுவார்த்தையின் போதே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்; சிங்கப்பூரின் கூட்டுமுயற்சியின் மூலம் வர்த்தக நடவடிக்கைளை மேம்படுத்த முடியும் எனவும் முதலீடு போன்றவற்றிலும் கூட்டாக செயற்படுவதன் மூலம் முக்கிய அபிவிருத்தி துறைகளில் பங்களிப்பு செய்யலாம் எனவும் சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன் போது சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சர்வதேச தண்ணீர் வாரம் உலக நகர மாநாடு மற்றும் தூய்மையான சுற்றாடல் மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அழைப்னினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதுடன் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சிங்கப்பூர் பிரதமர் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது