லிபியாவில் உள்ள பெங்காசி நகரில் நடந்த இரண்டு கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்காஸியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே கார் குண்டு வெடித்தது.
பின்னர் அதே இடத்தில் மீண்டும் 15 நிமிட இடைவெளியில் மற்றொரு குண்டு வெடித்தது.
ஆம்புலன்ஸ் வானங்கள் வந்து மீட்பு பணிகள் நடந்து கொண்டிருந்த நேரம் மற்றொரு கார் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.
இதில் 33 பேர் இறந்ததாகவும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என்று லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அவர்கள் காய்கறி கடையில் வேலை செய்து வந்தவர்கள் என்று கூறினர்.
மேலும் காயமடைந்தவர்கள் நிலைமை மோசமாகவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.