நாட்டில் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் பொலிஸாருக்கு வாகனங்களை சோதிக்க முறையான விதிமுறை ஒன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பொலிஸாருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை சோதிக்க பொலிஸார் மறைந்திருந்து வீதியின் நடுப்பகுதிக்கு ஓடி வருவதாகவும் அநுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் இப்படியான, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுவதகவும் எனவே முறையான விதிமுறை ஒன்று அவசியம் என்றும் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.