Loading...
திருகோணமலையில் குடித்து விட்டு வீதியில் மோசமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு 3000 ரூபாய் தண்டப் பணம் விதித்ததோடு, அத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தீவரகம்மான, கொட்பே, சீனக்குடா, பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
Loading...
குறித்த நபர் தீவரகம்மான பகுதியில் மது குடித்து விட்டு பாதையில் நின்று கொண்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, மோசமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் இவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...