பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான அறிக்கை சம்பந்தமாக முடிந்தால் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்திக் காட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கைகளை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்பிக்குமாறு வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன்; முடிந்தால் குறித்த இரண்டு அறிக்கைகள் சம்பந்தமாகவும் தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்திக் காட்டுமாறு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார்.
அறிக்கைகள் தொடர்பில் குரல் கொடுத்த அனைத்து திருடர்களும் ஒன்றிணைந்து அது தொடர்பில் விவாதம் நடத்துவதை பிற்போட்டு வருவதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.