நாட்டில் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதா அன்றேல், அச்சம் மிகுந்த காலப்பகுதிக்கே மீளத் திரும்புவதா என்பது தொடர்பில் மக்கள் துணிந்து தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (26.01.2018) ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையொன்றிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலானது, சிறியதொன்றதாக அமைந்துள்ள போதும், அடுத்துவரும் பல ஆண்டுகளுக்கு தேசிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமாகவும், தங்குதடையின்றியும் தமது வாழ்க்கையை மீண்டும் வாழ ஆரம்பித்த இலங்கையர்களின் வாழ்க்கையில் நீண்ட நிழலாக அமைந்திருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்தை நோக்கிய பயணத்தை முன்செல்வதா அன்றேல், அச்சம் மிகுந்த காலப்பகுதிக்கே மீளத் திரும்புவதா என்பது தொடர்பில் பெப்ரவரி 10ஆம் திகதி மீண்டும் ஒரு தடவை மக்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.