இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆரம்பித்தார்.
எனினும் தற்போது அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் சுமத்தி வருகின்றனர்.
இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடாக மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைப்பு வழங்கினார்.
இதன்பிரகாரமே அவர் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.