பல தடைகளை தாண்டி திருமணம் செய்த ஆணொருவருக்கு மனைவி மூலம் காத்திருந்த பேரதிர்ச்சி.
பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜேன். அவரது மனைவி மோனிகா இந்தோனேசியாவை சேர்ந்தவர்.
கடந்த 1993- ஆம் ஆண்டு அவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது. பெல்ஜியத்தில் குடியேற சட்டங்கள் மிகக் கடுமையானது.
அந்தக் கடினமான சட்டங்களை எல்லாம் எதிர் கொண்டு தனது ஆசை மனைவி மோனிகாவை பெல்ஜியம் அழைத்து வந்தார் ஜேன்.
ஆனால், 19 வருடங்கள் கழித்து தனது வாழ்வில் இப்படி ஒரு அதிர்ச்சி ஏற்படும் என்று ஜேன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
பல தடைகளைத் தாண்டி தான் திருமணம் செய்து வந்து 19 வருடங்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்திய மனைவி ஒரு பெண் அல்ல, ஆண் எனத் தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
மோனிகாவைப் பெண் என எண்ணி திருமணம் செய்து வந்த ஜேன், ”மோனிகா என்னை ஏமாற்றி விட்டார்.
அவரை பெல்ஜியம் அழைத்து வர நான் மிகவும் சிரமப்பட்டேன்.
பெல்ஜியம் நீதிமன்றம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அனுமதி அளிக்காது. நீதிமன்றம் நிராகரிக்க முயன்ற போதிலும் நான் போராடி அனுமதி பெற்றேன்.
ஆனால், மோனிகா என்னை ஏமாற்றிவிட்டார்” என்று ஜேன் கூறியுள்ளார்.
மோனிகா பாலியல் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண்.
தனது கடந்த காலம் பற்றி கூற விருப்பமில்லை என்பதால் இது பற்றி அவர் கூறவில்லை என்கிறார்