சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்து அடைக்கலம் கோருவோரின் எண்ணிக்கை 38.8 சதவீத வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
2017ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைந்தி ருக்கிறது.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த விண்ணப்பங்கள் கடந்த ஆண்டிலேயே கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டு எரித்ரியாவைச் சேர்ந்த 3 ஆயிரத்து 375பேர் அதிகளவில் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர்.
எனினும், இது முன்னைய ஆண்டை விட 35 வீதம் குறைவாகும். சிரியாவில் இருந்து ஆயிரத்து 951 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 9 வீதம் குறைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரத்து 217 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர்.
இது 62 வீத வீழ்ச்சியாகும். துருக்கியில் இருந்து 852 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இது 62 வீதம் அதிகரித்துள்ளது.
சோமாலியாவில் இருந்து 843 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர்.இலங்கையிலிருந்து 840 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 38.8 வீத வீழ்ச்சியாகும்.