யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இராணுவத் தளபதி நேரில் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு,- கிழக்கில் உள்ள 5 மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ளவற்றில்
விடுவிக்கப்படக்கூடிய காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள், இராணுவத் தளபதி
மகேஸ் சேனநாயக்க தலைமையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலர்கள், மாவட்ட படைத் தளபதிகள், ஜனாதிபதியின்; செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ,
பாதுகாப்பு அமைச்சின் செயலர், இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
அத்துடன் விடுவிப்பதற்கு படையினர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்த காணிகள்கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை என கூட்டத்தில் மாவட்டச் செயலர்களும், அரச தலைவரின் செயலரும்
சுட்டிக் காட்டியதுடன் அது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி இணங்கிக்கொண்டகாணிகள் விடுவிக்கப்படும் என்றும், இராணுவத்தினரின் பாவனையில் இல்லாதபோதும் அவர்கள் வசமுள்ள காணிகளில்
பலவும் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.