மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரனவ் . இவர் கமல் நடித்த பாபநாசம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
இவர் தற்போது ஆதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில் பிரனவ் படம் குறித்து பேட்டி எதும் கொடுக்க மாட்டேன் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம்.
படம் வெளியாகும் சமயத்தில் பிரனவ் இமயமலைக்கு கிளம்பி சென்றுள்ளார்.
மேலும் தல அஜீத் மாதிரி பட விளம்பரத்திற்கு வர மாட்டேன். பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாரே பிரனவ் என்று மலையாள திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
பிரனவ் பொதுவாக கூச்ச சுபாவம் உடையவர். இதனால் தன்னுடைய முதல் படத்தில் ஏதாவது பேசி படத்திற்கு பாதிப்பு வரக் கூடாது என நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.