பிரான்சில் பெண்களை பொதுவெளியில் கீழ்த்தரமாக விமர்சித்தால் அல்லது ஆடை அணிகலன் தொடர்பில் அவதூறு பேசினால் கடும் அபராதம் விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அபராத கட்டணமானது சுமார் 90 யூரோ முதல் குற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் என தெரியவந்துள்ளது.
பொதுவெளியில் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொண்டாலும் இந்த அபராதம் பொருந்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் பாதுகாப்புக்கு பொதுவெளியில் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சமீப காலமாக எழுந்த புகார்களுக்கு பதிலடி தரும்வகையில் இந்த அபராத சட்டம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் மற்றும் இழிவான நடத்தைகள் இதனால் கட்டுக்குள் வரும் என சமூக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் இந்த புதிய சட்டமானது எப்போதிருந்து நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.